இரவு நேர ஊரடங்கு எதிரொலி : சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் திடீர் மாற்றம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2022, 10:04 pm
Chennai Metro - Updatenews360
Quick Share

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம் செய்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நாளை காலை 5.30 மணி முதல் இரவு 9மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 334

0

0