ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் ராணுவ தளபதி இன்று ஆய்வு : மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இன்று கவுரவிப்பு

Author: Babu Lakshmanan
13 December 2021, 11:09 am
Quick Share

நீலகிரி : குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று ஆய்வு செய்கிறார்.

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து நீலகிரி போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், விமானப் படை தரப்பில் இருந்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விமான விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி நேரில் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே குன்னூருக்கு வருகிறார். முதலில் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் நரவனே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.

பின்னர், பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.

Views: - 262

0

0