கொரோனா ஊரடங்கு..! பசியோடு யாரும் இருக்க விடமாட்டோம்..! நிதியமைச்சரின் முழு பேட்டி உள்ளே..!

26 March 2020, 2:13 pm
Nirmala_Seetharaman_UpdateNews360
Quick Share

புதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு மற்றும் வேலை இழப்பு ஆகியவற்றின் கூடுதல் சவாலை எதிர்கொள்ள பொருளாதார ரீதியாக பலவீனமான மக்களுக்கு உதவ உணவு பாதுகாப்பு திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

1,70,000 கோடி ரூபாய் திட்டம், “பிரதமர் கரீப் கல்யாண் திட்டம்” என்று அழைக்கப்படுகிறது.  இது ஏழை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்று அவர் கூறினார்.

இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்த உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறதுஎன்று மேலும் கூறினார்.

இந்த பாதிப்பின் நிதி வீழ்ச்சியை மதிப்பிடுவதற்கான பணிக்குழுவின் தலைவராக இருக்கும் நிதியமைச்சர், முன்னோக்கி செல்வதற்க்கான பொருளாதார திட்டத்தை செய்தியாளர்களிடையே விளக்கினார். 

ஓய்வூதியம் பெறுவோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய எட்டு தலைப்புகளின் கீழ் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் பேசியதாவது : “1,70,000 கோடி ரூபாய் திட்டமான இது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் என அழைக்கப்படுகிறது. இது ஏழை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும்.


இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்த உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். 

ஏழைகளுக்கு 5 கிலோ கூடுதல் கோதுமை மற்றும் அரிசி அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கு 1 கிலோ பருப்பு வகைகளையும் இலவசமாகப் பெறுவார்கள்.

விவசாயிகளைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ரூ .6,000 செலுத்தும் முதல் தவணையை அரசாங்கம் வெளியிடும்.

பெண்கள் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ 500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இது ஜன தன் கணக்குகளைக் கொண்ட 20 கோடி பெண்களுக்கு பயனளிக்கும்.

கிராமப்புற வேலை உத்தரவாத திட்டமான கீழ் ஊதியத்தை ரூ 182’ல் இருந்து ரூ 202’ஆக உயர்த்தியுள்ளோம். இது ஐந்து கோடி தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

மூன்று கோடி விதவைகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வாங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும். 

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கிட்டத்தட்ட 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்.

தீன் தயால் யோஜனாவின் கீழ் உள்ள பெண்கள் சுய உதவிக்குழுக்களின் கீழ் ரூ 10 லட்சம் வரை பிணை இல்லாத கடன்களுக்கு தகுதியுள்ளவர்கள் இப்போது ரூ 20 லட்சம் பெறலாம்.

100 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்களில் 15,000 ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறுபவர்கள் 90 சதவீதத்திற்கும் மேல் இருந்தால், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊழியர் மற்றும் நிர்வாகம் ஆகிய இருவருக்குமான பி.எஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும்.

இந்த ஊழியர்கள் தங்கள் ஈபிஎஃப்ஒவிலிருந்து திரும்பப்பெறாத 75 சதவீத அட்வான்ஸ் தொகையையோ அல்லது மூன்று மாத ஊதியங்கள், இதில் எது குறைவாக இருகிறதோ அதை பெற முடியும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.