கடலூரை நெருங்கி வரும் ‘நிவர்’ : இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை வரை நீடிக்கவிருக்கும் கனமழை..!!

25 November 2020, 4:18 pm
chennai rain 4 - updatenews360
Quick Share

சென்னை : புதுச்சேரி அருகே கரையை கடக்கவிருந்த நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

இந்தப் புயல் கடலூரில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 214 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி அருகே அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் என்றும், நிவர் புயல் நெருங்க நெருங்க கனமழை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 8 மணியில் இருந்து கனமழை பெய்யத் தொடங்கும் என்றும், கரையை கடந்த பிறகும் புயல் 6 மணி நேரம் வலுவானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிவர் புயல் கரையை கடக்க சுமார் 2 மணிநேரம் வரை ஆகும் எனக் கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், “தற்போது வரை புதுச்சேரியை ஒட்டியே நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டை, வேலூரில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 24

0

0