1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்கவைப்பு

25 November 2020, 9:24 pm
Quick Share

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்க இருக்கிறது. நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். சுமார் 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது.