புயலை கையாளுவதில் சூப்பர் ஹுரோவான எடப்பாடியார் : வேட்டியை மடித்துக்கட்டி களப்பணியில் அதிரடி ..!!

25 November 2020, 8:01 pm
Quick Share

நிவர் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பேய் மழை பெய்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மழை வெள்ளத்தை வைத்து, ஆளும் அதிமுக அரசுக்கு பிரச்சாரத்தை நடத்தி விடலாம் என எதிர்கட்சிகள் பெரிதும் திட்டமிட்டிருந்தன.

ஆனால், அவர்களின் அத்தனை திட்டங்களிலும் இடியை இறக்கியது போல, தமிழக அரசு சும்மா சுழன்று சுழன்று செயல்பட்டு வருகிறது.

2015ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் மழையின் போது, செம்பரம்பாக்கத்தை ஒரே அடியாக திறந்து விட்டதால், ஏரியின் வெள்ளம், மழையோடு சேர்ந்து சென்னையை ஸ்தம்பித்தது. இருப்பினும், ஒரு அதிகாரியை மட்டும் கை காட்டி விட்டு, அனைத்து அரசியல் தலைவர்களும் அடுத்த காரியத்தை நோக்கி சென்று விட்டனர். அந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட வடுவை இன்னும் யாராலும் மறக்க முடியாது.

chennai flood 2015 1 - updatenews360

இந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தை புரட்டிப் போட வந்துள்ளது நிவர் புயல். இந்தப் புயலினால் சென்னை மாநகரம் முன்பை விட தற்போது சற்று கம்பீரமாகவே இருந்து வருகிறது. காரணம், செம்பரம்பாக்கம் ஏரி புயல் கரையை கடப்பதற்கு முன்பே திறந்து விடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டிலும் செம்பரம்பாக்கம் திறந்து விட்ட பிறகுதான் சிக்கலே ஆரம்பித்தது என்பது உண்மையாக இருந்தாலும், அப்போதைய அரசின் நடவடிக்கைகளிலும், தற்போதைய அரசின் நடவடிக்கைகளிலும் பல வித்தியாசங்கள் உள்ளன.

Chembarambakkam Water - Updatenews360

2015ல் மழை பெய்து கொண்டிருக்கும் போது, எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. ஆனால், தற்போது, புயலுக்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் இருக்கும பொதுமக்களை வெளியேற்றி விட்டு ஏரியை திறந்து விட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் பெய்யப் போகும் கனமழையை கருத்தில் கொண்டு, படிப்படியாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

Cm inspection 2 - updatenews360

அதோடு, கடந்த புயலின் போது அரசு சரியாக செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டிய எதிர்கட்சிகளின் வாயை அடைக்கும் விதமாக, கொட்டும் பணியிலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எடப்பாடியாரே களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிடுவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்து தருவது என அனைத்து விஷயங்களிலும் சிறப்பான பணியாற்றி வருகிறார். அதோடு, புயல் தொடர்பாக ஏதேனும் கருத்துக்களையோ, கோரிக்கைகளுக்கோ தம்பி என பாசமொழுக அழைத்து உடனடியாக பதிலளித்தும் வருகிறார்.

ஏற்கனவே, எளிமையான முதலமைச்சர் என்ற பெயரை பெற்ற எடப்பாடி பழனிசாமி, இந்தப் புயல் முன்னெச்சரிக்கையில் அதிரடியான நடவடிக்கைகளின் மூலம், அதிரடி நாயகன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். 2015ம் ஆண்டில் ஜெயலலிதா செய்யாததை கூட எடப்பாடியார் செய்து வருகிறார் என்ற பெயரையும் அவர் சம்பாதித்து விட்டார்.