என்எல்சி அனல்மின் நிலைய விபத்து…! பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

1 July 2020, 1:47 pm
Cuddalore_NLC_UpdateNews360
Quick Share

நெய்வேலி: என்எல்சி 2வது அனல் மின் நிலைய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

நெய்வேலி என்எல்சியில் 2வது அனல் மின் நிலையத்தில், 2 மாதத்தில் 4 முறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply