தடுப்பூசி போடலயா… அப்போ சம்பளம் இல்ல… : மின்சார வாரியம் அதிரடி உத்தரவு… ஊழியர்கள் ‘ஷாக்’!!

Author: Babu Lakshmanan
2 December 2021, 12:46 pm
Corona vaccine - EB - updatenews360
Quick Share

மதுரை : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று மின்சாரத்துறை அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னாப்ரிக்க உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான், தற்போது பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் தென்பட்ட நிலையில், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்த விமானங்கள் மூலம் வருபவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அதேவேளையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே, தடுப்பூசி செலுத்தாமல் பொது இடங்களுக்கு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் கிடையாது என்று மின்சாரத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்‌ பகிர்மான வட்டங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்து பணியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள் ‌கொரோனா தடுப்பு மருந்து முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணையினை எதிர்வரும்‌ 07.2.2021-க்குள்‌ செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களின்‌ டிசம்பர்‌ மாத ஊதியம்‌ நிறுத்தம்‌ செய்யப்படும்‌ என கடந்த 26.11.3021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்‌ வாரிய தலைவரால்‌ அறிவுறுத்தல்‌ வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தங்கள்‌ வட்டத்தில்‌ பணிபுரியும்‌ அனைத்து பணியாளர்களும்‌ தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல்‌ சமா்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும்‌ பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ்‌ பெற்று சமர்பிக்க அறிவுறுத்தும்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள்‌/ மதுரை மண்டலம்‌ அவர்கள்‌ கேட்டுகொள்ளப்படுகிறார்கள்‌. இது குறித்த விரிவான அறிக்கையினை வரும் 07ம் தேதி சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 251

0

0