கொரோனா 2வது அலை எதிரொலி : NO மாஸ்க்… NO பெட்ரோல்… பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

8 April 2021, 7:55 pm
No mask no petrol - updatenews360
Quick Share

சென்னை : ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 400 ஆக இருந்து வந்த சராசரி கொரோனா பாதிப்பு, இன்று 4,200 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 19 பேர் பலியாகியுள்ளன. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி விட்டது.

இதனிடையே, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஏப்.,10ம் தேதி முதல் ஏப்.,30ம் தேதி வரை தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Views: - 0

0

0

Leave a Reply