அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Author: Babu
8 October 2020, 4:58 pm
nobel prize medical - updatenews360
Quick Share

2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக உயரிய கவுரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த நோபல் பரிசுக்கு 211 தனிநபர்களும், 107 அமைப்புகளும் போட்டியில் உள்ளனர்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்மில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நோபல் பரிசுக்குரியவர்களை தேர்வு செய்யும் குழு, நோபல் பரிசை அறிவித்து வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அமெரிக்காவைச் சேர்ந்த லூயீஸ் கிளுக் வென்றுள்ளார்.

நாளை அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Views: - 44

0

0