தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை : இன்று முதல் கனமழை ஆரம்பம்..!!!

28 October 2020, 1:00 pm
TN rain - updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தமிழகம் மற்றும் கேரளாவில் இன்னு முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் சராசரி அளவிலே, வடகிழக்கு பருவமழை பெய்யும். சராசரி அளவு 44 சென்டி மீட்டர் ஆகும்.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 12

0

0