வடகர்நாடகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : கொட்டித் தீர்க்கும் கனமழை..!

Author: Babu
15 October 2020, 3:36 pm
karanata heavy rain - updatenews360
Quick Share

கர்நாடக மாநிலத்தில் பீதர், கலபுரகி உள்பட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், ஆந்திரா – தெலுங்கானா – கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில், கடந்த 4 நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது.

இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதுடன், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகர்நாடகா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பீதர், கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 41

0

0