நவ.,18 முதல் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் தொடக்கம் : 7.5% உள்ஒதுக்கீட்டில் பயன்பெறுபவர்களின் விபரமும் வெளியீடு..!!

16 November 2020, 11:27 am
counselling - updatenews360
Quick Share

சென்னை : வரும் 18ம் தேதி முதல் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் தொடகுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னையில் மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். அதில், மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன பிரியா 705 மதிப்பெண்களுடன் 2வது இடத்தை[யம், சென்னை மாணவி ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- நவ.,18ம் தேதி முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறும். 7.5 % உள்ஒதுக்கீட்டில் பயன்பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர், ஜீவித்குமார் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடம் அன்பரசன், 3வது இடம் திவ்யதர்ஷினி ஆகியோர் உள்ளனர், என தெரிவித்தார்.

Views: - 26

0

0

1 thought on “நவ.,18 முதல் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் தொடக்கம் : 7.5% உள்ஒதுக்கீட்டில் பயன்பெறுபவர்களின் விபரமும் வெளியீடு..!!

Comments are closed.