2021 மக்கள் தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைப்பு?…??

30 August 2020, 11:31 pm
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் மேலும் ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உதவியாக 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு அறிவித்துள்ள 2020 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் தொகை பதிவேடு. இது ஒரு பெரிய மற்றும் மோசமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது என்றும், உள்நோக்கம் கொண்டது; அபாயகரமானது என்று குற்றம்சாட்டியுள்ளனர். இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறவிருந்த 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேடு பணிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான NPR மற்றும் தரவு சேகரிப்பு பணியை மேலும் ஒரு ஆண்டுக்கு உள்துறை அமைச்சகம் தள்ளி வைக்க உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

Views: - 2

0

0