ஓபிஎஸின் ஒரேயொரு வார்த்தை : சசிகலாவின் ஆடியோ அரசியல் டமால்… குஷியில் இபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
28 July 2021, 3:25 pm
sasikala - ops - eps - updatenews360
Quick Share

சசிகலா விவகாரத்தில் இத்தனை நாட்கள் மவுனமாக இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தெரிவித்த கருத்தினால் எடப்பாடி பழனிசாமி குஷியடைந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை திமுக வெளியிட்டது. இந்தத் தேர்தலிலும் திமுக மாபெறும் வெற்றியைப் பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களை நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வெற்றிக்கு காரணமான கோரிக்கைகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அமைச்சர்கள் மலுப்பலான பதிலையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரிய குளத்தில் நடந்த போராட்டத்தின் போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறி வருகிறது, எனக் கூறினார்.

அப்போது, ஆடியோ வெளியிட்டுவரும் சசிகலா அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கிறாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது தனிப்பட்ட நபரோ குடும்பமா கட்சியை வழிநடத்த முடியாது. தனி நபரோ, ஒரு குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை அதிமுகவில் உள்ளது. ஜனநாயக முறைப்படி கட்சி நடக்கிறது. என்ன முயற்சி எடுத்தாலும், யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. தற்போதைய நிலை தொடரும்,” எனக் கூறினார்.

அதிமுகவைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக நிர்வாகிகளுடன் உரையாடி அந்த ஆடியோவை வெளியிட்டு சசிகலா தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரடியாக பதிலளித்து வந்த நிலையில், ஓபிஎஸ் மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ்ஸும் கருத்து தெரிவித்திருப்பது சசிகலாவின் ஆடியோ அரசியலுக்கு செக் வைத்தது போலாகிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஒற்றுமையாக இருப்பதையும் இந்தக் கருத்து உணர்த்துவதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.ஓ

Views: - 278

0

0