பட்டப்படிப்பு படிக்க வைத்த எம்ஜிஆரையே துரோகி என்பதா..? துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!

Author: Babu Lakshmanan
2 October 2021, 4:05 pm
ops - durai murugan - updatenews360
Quick Share

துரைமுருகன் படிப்பிற்காக உதவிய எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என்று அவரே விமர்சிப்பதா..? என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர்மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனைக்கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது

அதில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது :- சட்டமன்றத் தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை தி.மு.க அறிவித்தது. ஆனால் தற்போது அவற்றை காற்றில் பறக்கவிட்டு விட்டது. மு .க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு பேசினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. தற்போது தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது. பட்டப்பகலில் கொலை, கொள்ளை நடக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்தது. ஆனால், இப்போது மின்தடை ஏற்படுகிறது. அ.தி‌மு.க.வில் சாதாரண தொண்டரும் முதலமைச்சராக வர முடியும். அதிமுக தொண்டன் என சொன்னால் தமிழக மக்களிடம் பெரும் மரியாதை உள்ளது. இது எந்த கட்சிக்கும் கிடையாது. தி.மு.க ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. ஆட்சி காட்சி பொருளாக மாறியுள்ளது.

துரைமுருகன் எம்.ஜிஆரை பற்றி நா கூசாமல் அவதூறாக பேசியுள்ளார். அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அண்ணா எம்.ஜி.ஆர் என் இதயக்கனி என சொன்னாரே அவர் நம்பிக்கை துரோகியா..?, 1967 வெற்றிக்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் காரணம் என சொன்ன அண்ணா நம்பிக்கை துரோகியா?, ஏன் துரைமுருகனை படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினாரே, அவர் துரோகியா? திரைப்படங்கள் மூலம் தி.மு.க கொள்கைகளை பரப்பி தி.மு.க ஆட்சிக்கு வர காரணமானர் எம்.ஜி.ஆர், இவர் நம்பிக்கை துரோகியா? மேடையில் எல்லாரும் சிரிக்க வேண்டும் என்பதற்க்காக நா கூசாமல் பேசக்கூடாது.

மீண்டும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக துரைமுருகனுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். இப்போது நாம் பெறும் வெற்றி அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதற்க்கு அடித்தளமாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வெற்றி பெற வேண்டும் நாம் பெறப்போகும் வெற்றியின் மூலம் இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 558

0

0