ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார் : மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

Author: Babu Lakshmanan
1 September 2021, 9:53 am
OPS - wife - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பு காரணமாக காலமானார். மனைவியின் மறைவை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையிலேயே இருந்து வருகிறார். மருத்துவ நடைமுறைகளை முடித்து விட்டு, விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைய உள்ளனர்.

Views: - 538

0

0