ஓபிசிக்கு 27%… பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10%… இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு…!!!

Author: Babu Lakshmanan
29 July 2021, 4:51 pm
south block 1 - updatenews360
Quick Share

மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய பிரிவில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசுகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய பிரிவில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பதிலளிக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், மாநில அரசுகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய பிரிவில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை அளிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த இடஒதுக்கீட்டின் மூலம் இளங்கலை மற்றும் முதுகலையில் மொத்தம் 4,000 ஓ.பி.சி பிரிவு மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களில் 1,550 மாணவர்களும் பயனடைவார்கள். எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ்., டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 171

0

0