1000 படுக்கைகளுடன் நாட்டின் முதல் கொரோனா சிறப்பு ஹாஸ்பிடல்..! எங்கேன்னு பாருங்க..?

26 March 2020, 4:20 pm
Corona Virus_Updatenews360
Quick Share

புவனேஸ்வர்: நாட்டிலேயே முதல் முறையாக 1,000 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையை ஒடிஷா அரசு அமைக்கிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பசி இன்னும் அடங்க வில்லை. அதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இந் நிலையில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையை ஒடிஷா அமைக்கிறது.

இந்த சிறப்பு மருத்துவமனை 2 வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. ஒடிஷாவில் கொரோனாவால் 2 மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முன் ஏற்பாடாக ஒடிஷா அரசு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது.

நாட்டிலேயே முதன்முறையாக கொரோனா சிறப்பு மருத்துவமனையை ஒடிஷா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply