டெல்டா வைரஸை விட மிகக் கொடூரமானது ஒமைக்ரான்… முதல் புகைப்படத்தை வெளியிட்ட ரோம் ஆராய்ச்சியாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 3:45 pm
corona - updatenews360
Quick Share

டெல்லி : பொதுமக்களிடையே மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸின் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை ரோம் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தென்னாப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பல முறை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று கூறியுள்ள நிபுணர்கள், நோய் எதிர்ப்பை எளிதில் தகர்க்கக் கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், ஒமைக்ரான் வைரஸ், 50க்கும் மேற்பட்ட உருமாற்றங்களை கொண்டிருப்பதாகவும், அதில் 32 மாற்றங்கள் ஸ்பைக் புரோட்டீன்களில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், பலமுறை உருமாறிய ஒமைக்ரான் வைரஸின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வகை வைரசிற்கும், ஒமைக்ரான் வகை வைரசிற்கும் உள்ள வித்தியாசங்களை அந்த புகைப்படத்தில் தெளிவுப்படுத்தியுள்ளனர். அதாவது, டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் அதிக உருமாற்றங்களை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Views: - 218

0

0