ஒமிக்ரான் அச்சுறுத்தலால் தமிழக பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு… தமிழக அரசு அதிரடி

Author: Babu Lakshmanan
3 December 2021, 7:16 pm
School Sat Leave -Updatenews360
Quick Share

சென்னை : தமிழக பள்ளிகளில் ஒமிக்ரான் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, தமிழக பள்ளிகளில் ஒமிக்ரான் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அசு அறிவித்துள்ளது.

அதாவது, இறைவணக்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள், NSS, NCC வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் நீச்சல்குளங்களை திறக்கக் கூடாது, என ஆணையிடப்பட்டுள்ளது.

Views: - 203

0

0