ஊரடங்கின் போது போராட்டம்…! சத்துணவு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம்
2 August 2020, 7:18 pmசென்னை: சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு பணமாக வங்கியின் மூலம் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் அனுப்ப அரசாங்கம் துரிதமாக செயல்பட்டது. இதனை தவிர்க்க கோரியும், சத்துணவு ஊழியர்களின் பிரதானமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 7ம் தேதி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தனிமனித விலகலுடன் முகக்கவசம் அணிந்து அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந் நிலையில் ஜூலை 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தின் போது ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பள பிடித்தம் தொடர்பான உத்தரவை திரும்பப் பெற சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.