கொரோனாவே முடியல…! அதுக்குள்ளவா..? சீனாவில் புது வைரஸ்…!

30 June 2020, 11:10 am
Quick Share

பெய்ஜிங்: கொரோனாவால் உலகமே அரண்டு போயிருக்கும் நிலையில் வேறொரு புதிய வைரஸ் உருவாகி உள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து பரவ தொடங்கியது தான்  கொரோனா வைரஸ். இன்று 200 நாடுகளில் 1 கோடி பேரை பாதித்துள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் பலியாகிவிட்டனர். இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய வைரஸ் பரவி வருவதாக சீன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் பன்றிகளுக்கு புதுவிதமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட, இந்த வைரஸ் மனிதர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வரும் காலங்களில்  இந்த வைரசால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதை தொடர்ந்து  கண்காணிக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. 

Leave a Reply