ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் : தடையை மீறினால் 6 மாத சிறை தண்டனை..!!

20 November 2020, 8:25 pm
Online_Rummy_Poker_Ban_Andhra_UpdateNews360
Quick Share

சென்னை : ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும்‌ அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ஆன்லைன்‌ ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில்‌ பணம்‌ வைத்து ஈடுபடுவதன்‌ மூலம்‌ பொதுமக்கள்‌ குறிப்பாக, இளைஞர்கள்‌ தங்களது பணத்தையும்,‌ வாழ்க்கையையும்‌ தொலைத்துவிடும்‌ அவலத்தை தடுக்கும்‌ விதமாக தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்ற உள்ளது.

இந்த அவசர சட்டத்தின் மூலம் 1930-ம்‌ ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச்‌ சட்டம்‌, 1889-ம்‌ ஆண்டு சென்னை நகரக்காவல்‌ சட்டம்‌ மற்றும்‌ 1859-ம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட
காவல்‌ சட்டம்‌ ஆகியவற்றிற்கு சட்டதிருத்தங்கள்‌ மேற்‌ கொள்வதன்‌ மூலம்‌ கீழ்கண்ட நோக்கங்களுக்காக இயற்றப்பட உள்ளது;-

I) இவ்விளையாட்டில்‌ பணம்‌ வைத்து ஈடுபடுவோரையும்‌ அதில்‌ ஈடுபடுத்தப்படும்‌ கணினிகள்‌ மற்றும்‌ அது தொடர்பான உபகரணங்களை தடை செய்யவும்‌;

ii) இத்தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000/- அபராதமும்‌ ஆறு மாத சிறைத்தண்டனையும்‌ வழங்கவும்‌;

iii) ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டு அரங்கம்‌ வைத்திருப்போர்களுக்கு ரூ.10,000/-அபராதமும்‌ இரண்டு வருட சிறைத்தண்டனையும்‌ வழங்கவும்‌;

iV) இவ்விளையாட்டில்‌ பணப்பரிமாற்றங்களை இணைய வழி மூலம்‌ மேற்கொள்வது தடுக்கவும்‌;

4) இவ்விளையாட்டை நடத்தும்‌ நிறுவனங்களின்‌ பொறுப்பாளர்களின்‌ மீது நடவடிக்கை எடுக்கவும்‌, தண்டிக்கவும்‌ இந்த அவசர சட்டம்‌ வழி வகுக்கும்‌ வகையில்‌
தமிழ்நாடு ஆளுநர்‌ பன்வாரிலால்‌ புரோகித்‌ அவர்கள்‌ ஆன்லைன்‌ ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும்‌ அவசர சட்டத்திற்கு ஒப்புதல்‌ வழங்கியுள்ளார்‌.

Views: - 22

0

0