அயோத்தி கோயில் திறப்பு.. பாஜகவுக்கு ஓட்டு விழுகாது : மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 9:58 am
Karti Chidambaram - Updatenews360
Quick Share

அயோத்தி கோயில் திறப்பு.. பாஜகவுக்கு ஓட்டு விழுகாது : மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்!!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.. உணவு விஷயத்தில் கொந்தளித்துபோன அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் என்று கார்த்தி சிதம்பரம் சொன்னதுமே, பலரும் திரண்டு வந்து அந்த பதிவினை படித்தனர்.

அதில், “ராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே. ராமன் வனவாசம் போக வேண்டும் என்ற நிலை வந்தபோது மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான், “அம்மா” நான் இராஜாங்கத்தையும், பரிபாலனத்தையும் இழக்க வேண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும் – அயோத்தியா காண்டம் 20, 26, 94 ஆகிய அத்தியாயங்கள் என பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

ராமர் கோயில் திறப்பு குறித்து, கார்த்தி சிதம்பரம் இப்போது மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், “அயோத்தி கோயில் திறப்பு நிகழ்வை காங்கிரஸ் கட்சி அரசியலாகத்தான் பார்க்கிறது. மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அதை பின்பற்றுவதில் தவறில்லை.

எம்.பி தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன. தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி கட்டினால் மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே நிதி வழங்குகிறது. வடமாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு குறைவாக வரி கட்டினால் ஒரு ரூபாய்க்கு அதிகமாகவே நிதி வழங்குகிறது.

முன்னேறுகிற மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு மறுக்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தையை துவங்க உள்ளோம்.

அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 10 வருடமாக பாஜக செய்த திட்டங்களின் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள்” என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Views: - 158

0

0