பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு : தமிழக அரசு வெளியிட்டுள்ள தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 7:21 pm
Curfew -Updatenews360
Quick Share

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் சில தளர்வுகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு

•நாளை மறுநாள் முதல் 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதி

•வரும் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி

•டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த தமிழக அரசு அனுமதி

•தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி

•தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி

•கடற்கரையில் பொதுமக்கள் அனுமதி – கடற்கரையில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

•தகவல் தொழில்நுட்பம் மற்றும அதை சார்ந்த நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

•நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி

•மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதி

•அங்கன்வாடி மையங்கள் செப்.,1 முதல் மதிய உணவு வழங்க அனுமதி

•ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

Views: - 287

0

0