திரௌபதி முர்முவை சந்திக்கும் போது தன்னிச்சையாக ஓபிஎஸ் செய்த செயல் : இபிஎஸ் சென்றதும் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 6:27 pm
Ops - Updatenews360
Quick Share

சென்னை : அதிமுக சட்டவிதிகளின்படி இன்றுவரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை வந்த திரெளபதி முர்மு-க்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். திரெளபதி முர்முவை தனித் தனியாக சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு அளித்துள்ளார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு அதிமுக முழு ஆதரவைத்தருவதாக தெரிவித்துள்ளார்.

விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்திருந்த நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு, ஓபிஎஸ் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதிமுக சட்டவிதிகளின்படி இன்றுவரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 432

0

0