30 தொகுதிகளை குறிவைக்கும் ஓவைசி..!! மாறும் தமிழக அரசியல்… சோகத்தில் ஸ்டாலின்…!!

24 November 2020, 6:47 pm
Owaisi - dmk - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் குறைந்தது 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று ஒவைசியின் ஏ.ஐ.எம், ஐ.எம் அறிவித்துள்ளதும், திமுக தோல்வியடைந்தால் ஒவைசி கட்சி பொறுப்பல்ல என்று வெளிப்படையான எச்சரிக்கை விடுத்திருப்பதும் திமுகவை கடுமையாக ஆட்டம் காண வைத்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்புவரை முஸ்லிம்கள் ஓட்டு மொத்தமாக நமக்குத்தான் என்று கணக்குப்போட்டு வைத்திருந்த திமுக தலைவர் எதிர்பாராத திருப்பத்தால் பெருமளவு திகைப்படைந்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் புதியதாக ஒரு கட்சி காலடி வைக்கும் என்பதோ, அந்தக் கட்சி இதுவரை திமுகவுக்குக் கிடைத்து வந்த முஸ்லிம் வாக்குகளுக்கு ஆப்பு வைக்கும் என்பதோ, யாரும் எதிர்பாராத அரசியல் திருப்பங்களாகும். “நடக்கும் என்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடும்” என்று கவியரசர் கண்ணதாசன் பாடல்போல அதிரடித் திருப்பங்கள் தமிழக அரசியல் அரங்கில் நடந்தேறி வருகிறது.

Asaduddin_Owaisi_UpdateNews360

ஒவைசி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வாகீல் அகமது அளித்துள்ள பேட்டியில், திமுகவையும், காங்கிரசையும் கடுமையாகச் சாடியுள்ளது திமுக தலைவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் க. துரைமுருகனுடன் கடந்த இரண்டு மாதங்களாக கூட்டணி அமைப்பது குறித்துப் பேசிவருகிறோம். ஆனால், திமுக இதுவரை பாராமுகமாகவே இருக்கிறது என்று வாகீல் அகமது ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய கூட்டணி எதிலும் இல்லாமல் சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளைப் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் கட்சியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

stalin upset - updatenews360

மேலும், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதாக அவர் கூறியிருப்பதுதான் திமுகவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தோற்றால் தங்களைக் குற்றம் சாட்டக்கூடாது என்று வாகீல் அகமது சொல்லியிருப்பது திமுக தலைவர் ஸ்டாலினை அதிர வைத்துள்ளது. இந்திய முழுவதற்கும் ஒரு இஸ்லாமிய கட்சி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு முஸ்லிம்களுக்கும் வந்துள்ளது என்று அவர் கூறியிருப்பதும் திமுக, காங்கிரஸ் தலைவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

இதனுடன் வாகீல் அகமது நிற்காமல், காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்குதல் தொடுத்திருப்பது திமுக கூட்டணிக்கு கிலியைக் கூட்டியுள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கும் முன்பு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்துபோது, ஒவைசி கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தது. ஆனாலும், முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தரும்படி கேட்டதை காங்கிரஸ் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளது, தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராகத்தான் ஒவைசி கட்சி செயல்படும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பத்து இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

DMK - Congress - Updatenews360

“பாஜக என்பது எங்களுக்கு எதிரில் நேருக்கு நேர் நிற்கும் எதிரி. காங்கிரஸ் என்பது எங்கள் முதுகில் குத்தும் துரோகி” என்று வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்துக்கட்சிகளுக்கும் எச்சரிக்கை மணி அடிப்பதுபோல் அமைந்துள்ளது.

இதுபோன்ற தாக்குதலையே ஒவைசியின் கட்சி பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மீது தொடுத்தது. அந்த மாநிலத்தில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 இடங்களில் தோற்றது. தற்போது வாகீல் அகமது அதே பிரச்சாரத்தையே தமிழகத்தில் தொடங்கியுள்ளார். இதனால், திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் முஸ்லிம்கள் திமுகவுக்கு எதிராக ஓட்டளிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஒவைசி கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் இணைக்க வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அப்படியே இரு கட்சிகளையும் அணீயில் சேர்த்தால் தொகுதி ஒதுக்குவதில் பிரச்சினை ஏற்படும். பீகாரில் ஒவைசி கட்சியை கூட்டணியில் சேர்க்க முதலில் ராஷ்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் முயற்சி செய்தார். தற்போது திமுகவுக்கு ஏற்பட்ட தொகுதிப்பிரச்சினை அவருக்கும் ஏற்பட்டதால் ஒவைசி கட்சியைக் கூட்டணியில் சேர்க்காமல் தேஜஸ்வி யாதவின் முதல்வர் வாய்ப்பு தகர்ந்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பீகார் தேர்தலின் ‘பார்ட்-டூ’ ஆக மாறிவருவதற்கு அனைத்து அறிகுறிகளும் தென்படுகின்றன. கங்கைக்கரையில் கடந்துபோனது கூவத்துக்கரையிலும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது.

Views: - 24

0

0