இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய இங்கிலாந்து: 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தடைந்தன..!!

4 May 2021, 12:36 pm
uk london - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்தடைந்தன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வழக்கத்தை விட தினமும் 4 மடங்கு நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதால் படுக்கை வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகரித்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லிட்டர் திறன் கொண்ட 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று தமிழகம் வந்தடைந்துள்ளது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை தட்டுப்பாடு நீங்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்தியாவிலும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Views: - 60

0

0