நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு : ரேஷன் கடைகளில் பயறு வகைகளை விற்பனை செய்ய திட்டம்
Author: Babu Lakshmanan14 August 2021, 10:55 am
சென்னை : தமிழக பட்ஜெட் வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே வேளாண்மைக்கு என தனிபட்ஜெட் இந்த முறை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அவர் பேசியதாவது :- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை, அடுத்து 10 வருடங்களுக்குள் அடைய வேண்டும் என்பதை அடிப்படை நோக்கம். ரூ.146.64 கோடி செலவில் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் நடைபெறும்.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் முதற்கட்டமாக 2,500 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் முக்கிய அம்சாகும்.
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கப்படும்
இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.59.55 கோடி ஒதுக்கீடு
விளைப்பொருட்களை பெருநகர சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்க முன்னுரிமை
2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டத்திற்கு ரூ.2.68 கோடி ஒதுக்கீடு
பனைமரத்தின் பரப்பு வெகுவாக குறைவதால் திட்டத்தை செயல்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு
பனை மேம்பாட்டு இயக்கம் – 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் விநியோகம்
14 மாவட்டங்களில் உள்ள விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்படும்
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு
நெல் ஆதரவு விலை – ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.70ல் இருந்து 100ஆக உயர்வு
ஒரு குவிண்டால் சாதாரண ரகத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.75ஆக உயர்வு
தமிழகத்தில் பனிமரங்களை இனி வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்
அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, கீரை சாகுபடி பயிர் செய்ய மானியம் வழங்கப்படும் காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டத்திற்கு ரூ. 95 கோடி ஒதுக்கீடு வைட்டமின் சி பெட்டகம் எனப்படும் நெல்லி 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும்
வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொலை நோக்குத் திட்டம் விளைநிலங்கள் வீட்டுமனை ஆவதால் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது விவசாய சாகுபடி பரப்பை 75% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது
உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது
இருபோக சாகுபடி பரப்பை 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்க நடவடிக்கை கிராம அளவில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிப்பு சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை விவசாயிகள் திட்டம் செயல்படுத்தப்படும்
சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டம் தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டுபிடிப்பு
வேளாண்மைத்துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கம் இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் நடப்பாண்டில் அறிமுகம்
நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் அறிமுகம் ஊரக இளைஞர் வேளாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மானாவரி நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு மானியம் வழங்கப்படும்
பயறு வகைகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டம்
மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தில் பயறு வகைகள் சேர்க்கப்படும்
0
0