குறுவை நெல் கொள்முதல் பணிகளை தாமதப்படுத்தக் கூடாது : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
7 October 2021, 8:05 pm
Stalin - Updatenews360
Quick Share

குறுவை நெல்‌ கொள்முதல்‌ பணிகளை விரைவாகவும்‌, சிறப்பாகவும்‌ முடிக்கப்பட வேண்டும்‌ என்று கொள்முதல்‌ பணிகள்‌ ஆய்வுக்‌ கூட்டத்தில் முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ‌ உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (7.10.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, தற்போது தமிழ்நாட்டில்‌ குறுவை பருவ நெல்‌ சாகுபடி முழுவீச்சில்‌ நடைபெறுவதை கருத்தில்கொண்டு, இது குறித்த பணிகளை ஆய்வு செய்தார்‌. மேலும்‌, டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களுடன்‌ தொலைபேசியில்‌ தொடர்புக்‌ கொண்டு தற்போதைய கொள்முதல்‌ பணிகள்‌ குறித்து விவரங்களைக்‌ கேட்டறிந்தார்‌.

paddy - updatenews360

குறுவை பருவ நெல்‌ கொள்முதல்‌ செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழகத்தால்‌ தற்போது 843 நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 1-10- 2021 முதல்‌ 6-10- 2021 வரையில்‌ 36 ஆயிரத்து 289 டன்‌ நெல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும்‌, கொள்முதல்‌ பணிகள்‌ சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ இப்பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்களை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அனுப்பி வைத்துள்ளார்கள்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 401

0

0