நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிறுறன்றும் செயல்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு..!

Author: Babu
3 October 2020, 4:27 pm
paddy 1 - updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நெல் மணிகள் மழையில் நனையும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, நெல் மணிகள் முளைக்கத் தொடங்கின. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனர். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்ற அரசும் இன்று டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆணையிட்டது. தஞ்சையில் மட்டும் 277 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.

சன்னரக நெல், குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாய் ஊக்கத்தொகை சேர்ந்து ஆயிரத்து 958 ரூபாய்க்கும், பொது ரக நெல், 50 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து ஆயிரத்து 918 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நாள்தோறும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

Views: - 138

0

0