பழனி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமாருக்கு கொரோனா உறுதி..!

8 August 2020, 6:14 pm
DMK MLA corona -1 - updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி சட்டமன்ற தொகுதிக்கான தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதேவேளையில், நோய் தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நோய் தொற்றுக்கு அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அமைச்சர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 1

0

0