ஈட்டியும்… இந்தியாவும்… ஒரே நாளில் இரட்டைத்தங்கம் : 2வது தங்கத்தை பெற்றுக் கொடுத்தார் சுமித்..!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 5:22 pm
sumith andil - updatenews360
Quick Share

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சுமித் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும்.10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் இவர் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார் 19 வயதாகும் அவனி லெகரா. இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இதன்மூலம், பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.

Image

இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனையை படைத்ததோடு, இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

ஏற்கனவே ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

Views: - 224

0

0