பரபரப்பை கிளப்பிய பரமக்குடி சிறுமி பாலியல் வழக்கு : மக்கள் போராட்டத்துக்கு பின் டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 10:01 pm
Paramkudi - Updatenews360
Quick Share

தமிழக காவல்துறை வெளிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்யும் பொருட்டு, டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB CID) மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சிகாமணி 44, புதுமலர் பிரபாகரன் 42, ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது 36, உடந்தையாக இருந்த கயல்விழி 45, அன்னலட்சுமி 34, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆயிர வைசிய சபையின் சார்பில் பரமக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பரமக்குடி நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களைத் திரட்டி மகாத்மா காந்தியின் சிலை முன்பு கண்டன உரை நிகழ்த்தி தமிழக அரசின் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் தான் சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Views: - 485

0

0