இன்னும் 3 மாதங்களில் வெடிக்கப்போகும் மிகப்பெரிய பிரெளயம் : மாடர்ன் சாமியாரின் வாக்கால் தமிழகத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
28 November 2021, 11:53 am
Quick Share

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் மிகப்பெரிய பிரெளயம் வரப் போவதாக வாக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மாடர்ன் சாமியார் பவித்ரா காளிமாதா.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா காளிமாதா என்பவர் அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது. சுடிதாருடன் கழுத்து நிறை நகைகள் அணிந்து, மாறுபட்ட முகம் மற்றும் சிகை அலங்காரங்களுடன் கோவில் கோவிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது சொல்லும் வாக்குகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவருக்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்தான் பவித்ரா என்று பெயர் வைத்ததாகவும், காளி கடவுளின் மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் பவித்ரா காளிமாதா என்று தனது பெயரை மாற்றி வைத்து விட்டதாகவும் கூறினார். அதோடு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை தங்கத் தாரகை என்று பெயரிட்டு அழைத்ததாகவும், தன்னிடம் ஆசி பெற்று ஒரு ரூபாய் காசு வாங்கியதால் தான் ஓ.பி.எஸ். முதல்வர் ஆனதாகவும் கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தன்னை எடப்பாடி பழனிசாமி வரவேற்காததால்தான் கடந்த ஆட்சியில் அவர் தோல்வியடைந்ததாகவும், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வரை என்னுடைய பக்தர்களாக உள்ளனர் என்றும் கூறி தெறிக்கவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், வழக்கம் போல முழு மேக்கப்பில் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்ய வந்த அவர், காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். அங்கிருந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கிய பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது :- சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன். உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்.

உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும், எனக் கூறி தமிழக மக்களை அலற விட்டுள்ளார்.

Views: - 195

0

0