மத்திய அமைச்சரிடம் கோப்புகளை பறித்து கிழித்தெறிந்த திரிணாமூல் எம்பி..!! மாநிலங்களவையில் நிகழ்ந்த கலவரம்..!!

22 July 2021, 4:42 pm
rajiya sabha - updatenews360
Quick Share

நாடாளுமன்றத்தில் அமைச்சர் கையில் வைத்திருந்த கோப்புகளை பறித்து கிழித்தெறிந்த திரிணாமூல் எம்பியால் பரபரப்பு ஏற்பட்டது.

பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்த நிலையில், இன்று மாநிலங்களவை தொடங்கியதும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுந்தார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த கோப்புகளை பறித்த திரிணாமூல் எம்பி சாந்தனு சென் அதனை கிழித்தெறிந்தார்.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும், எம்பி சாந்தனு சென்னும் ஆவேசமாக திட்டிக் கொண்டனர். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மேலும், அமைதி காக்குமாறு சபாநாயகர் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். இதனால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், அமைச்சரிடம் இருந்த கோப்புகளை பறித்து கிழித்ததால், பாஜக – திரிணாமூல் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

Views: - 113

0

0

Leave a Reply