செப்.,1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதாமாதம் மாணவர் ஒருவருக்கு தலா 10 முட்டைகள் வழங்க உத்தரவு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

4 September 2020, 11:49 am
eggs - updatenews360
Quick Share

சென்னை : செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதத்திற்கு மாணவர் ஒருவருக்கு தலா 10 முட்டைகளை வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :- கோவிட்‌-19 வைரஸ்‌ நோய்‌ பாதிப்பினால்‌ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளும்‌ விடுமுறையில்‌ உள்ள சூழ்நிலையில்‌, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவுத்‌ திட்டத்தில்‌ பயனடையும்‌ மாணவ, மாணவியர்களுக்கு சூடான சத்துணவு சமைத்து வழங்க முடியாத நிலை உள்ளதாலும்‌, மாணவ மாணவியரின்‌ ஊட்டச்சத்து நிலையினை கவனத்தில்‌ கொண்டும்‌, மைய அரசின்‌ அறிவுரையின்‌ அடிப்படையிலும்‌ பள்ளிகளின்‌ கோடை விடுமுறைக்‌ காலமான மே 2020 மாதத்திற்கு தொடக்கப்‌ பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா 3.100 கிலோ கிராம்‌ அரிசியும்‌, 1200 கிலோ கிராம்‌ பருப்பும்‌ உயர்‌ தொடக்கப்‌ பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா 4650 கிலோ கிராம்‌ அரிசியும்‌, 1.250 கிலோ கிராம்‌ பருப்பும்‌ வழங்குவதற்கு ஆணையிடப்பட்டது. இதற்கென மாநில அரசால்‌ வழிகாட்டு நெறிமுறைகளும்‌ வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ்‌ தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து ஜீன்‌, 2020 மாதம்‌ முதல்‌ மீண்டும்‌ இயல்பு நிலை திரும்பி பள்ளிகள்‌ திறக்கப்படும்‌ நாள்‌ வரை உள்ள பள்ளி வேலை நாட்களுக்கு மட்டும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ சத்துணவுத்‌ திட்டத்தில்‌ பயனடையும்‌
தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 100 கிராம்‌ அரிசியும்‌ 40 கிராம்‌ பருப்பும்‌, சத்துணவுத்‌ திட்டப்‌ பயனாளிகளுக்கு உலர்‌ உணவுப்‌ பொருட்களை மே-2020 வரை பள்ளிகளில்‌ வழங்கியது போல முட்டைகளையும்‌ கொரோனா தொற்றுக்‌ காலம்‌ முடியும்‌ வரை (முட்டைகளின்‌ எண்ணிக்கை,
வழங்கப்படும்‌ நாட்கள்‌ மற்றும்‌ நெறிமுறைகள்‌ அரசின்‌ முடிவுக்கு உட்பட்டது அங்கன்வாடி ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ அல்லது ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களைக்‌ கொண்டு வழங்க வேண்டும்‌ என்று ஆணையிடப்பட்டது.

சமூக நல ஆணையர்‌ அவர்கள்‌, நீதிப்பரோணை எண்‌. 9220/2020-இல்‌ மாண்புமிகு சென்னை உயர்‌ நீதிமன்றம்‌ வழங்கிய வழிகாட்டுதல்‌ ஆணையின்‌ அடிப்படையில்‌ முட்டைகளை வழங்கும்போது மாணவ மாணவியர்களை அன்றாடம்‌ பள்ளிகளுக்கு வரவழைத்து வழங்க இயலாது என்றும்,‌ கொரோனா நோய்த்‌ தொற்று காரணமாக போக்குவரத்து வசதியின்மை, முகக்கவசம்‌ அணிவது மற்றும்‌ சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றால்‌ ஒரே நேரத்தில்‌ முட்டைகளை வழங்கினால்‌ அவை கெட்டுவிடுவதற்கும்‌ உடைபடவும்‌ வாய்ப்பாகி விடும்‌ என்றும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ சத்துணவுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பதிவுபெற்ற 20,38,745 தொடக்கப்‌ பள்ளி பயனாளிகள்‌, 13,61,165 உயர்தொடக்கப்‌ பள்ளி பயனாளிகள்‌ மற்றும்‌ 4,746 தேசிய குழந்தை தொழிலாளர்‌ திட்ட சிறப்புப்‌ பள்ளி பயனாளிகள்‌ ஆக மொத்தம்‌ 34,04,656 பயனாளிகளுக்கு, அப்பயனாளிகளின்‌ பெற்றோர் ‌/ பாதுகாவலரை உரிய அத்தாட்சியுடன்‌ ஒரு மாதத்தில்‌ இருமுறை அந்தந்த சத்துணவு மையங்களுக்கு நேரில்‌ வரவழைத்து முட்டைகளை உலர்‌ உணவுப்‌ பொருட்களுடன்‌ உரிய வழிமுறைகளை பின்பற்றி பள்ளிக்‌ கல்வித்துறையைச்‌ சார்ந்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்‌/தலைமை ஆசிரியை மற்றும்‌ ஆசிரியர்களை ஈடுபடுத்தி வழங்கி பணிகளை உடனுக்குடன்‌ முடித்திடுமாறு மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ துணை ஆணையர்‌ (கல்வி) பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரை கேட்டுக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌ இதன்‌ பொருட்டு உரிய அரசாணையினை வழங்கிடுமாறும்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0