பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி…! போலீஸ் குவிப்பால் பெரும் பரபரப்பு…!
Author: kavin kumar12 August 2021, 9:31 pm
விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்த ஜீலை 28 ஆம் தேதி மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரோல் வழங்கினார்.இதனிடையே பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் தனது தாயார் அற்புதம்மாளுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அவரது இல்லத்தில் இருந்து வருகிறார்.இந்நிலையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த நவம்பர் மாதம் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பேரறிவாளன் தொடர் மருத்துவ பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்தி வருகிறார்.
அதன்படி மருத்துவ பரிசோதனைக்காக இன்று பேரறிவாளன் திருப்பத்தூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காவல் துறை பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.தனது தாயார் அற்புதம்மாளுடன் வந்த பேரறிவாளன் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக சோதனை மற்றும் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக இன்றும் நாளையும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேரறிவாளனின் வருகையையொட்டி விழுப்புரம் – புதுச்சேரி சாலை மற்றும் தனியார் மருத்துவமனையை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.
0
0