பெரியார் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம்.. இதுதா உங்க பகுத்தறிவா..? கலாய்க்கும் நெட்டிசன்கள்… முட்டுக்கொடுத்த திமுக எம்பி…!!

Author: Babu Lakshmanan
17 September 2021, 7:09 pm
Quick Share

சேலத்தில் பெரியார் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், திமுக எம்பி அதற்கு விநோத விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

தமிழகத்தில் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட தந்தை பெரியார், பகுத்தறிவாளனாக வாழ்ந்து வந்தார். சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூகநீதி ஆகியவற்றை நிலைநிறுத்த வாழ்நாள் முழுவதும் போராடி, தீண்டாமை – மூடநம்பிக்கை உள்ளிட்ட சமூக சீர்கேடுகளை களைய அரும்பாடுபட்டவராக திகழ்ந்தார். இவரது பிறந்த நாளை சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பகுத்தறிவாளனாய் திகழ்ந்த பெரியாரின் பிறந்த நாளன்று சேலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.

சேலத்தில் தாரை தப்பட்டை முழங்க, மயிலாட்டம், காவடி, கரகாட்டம் என தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் களைகட்டியது. ஒரு பகுதியாக, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனின் அலுவலகம் முன்பு 40 அடி உயர கட் அவுட்டிற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, சட்டக்கல்லூரி படிக்கும் மாணவர்கள் சிலர் பெரியார் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தனர். இந்த சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.

மதம் சம்பிரதாயங்கள், இறை வழிபாடு உள்ளிட்டவை மீது நம்பிக்கையில்லாத பகுத்தறிவாளனுக்கு பால் அபிஷேகமா..? என்று நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், நெட்டிசன்களின் கேள்விகளால் திக்கிமுக்காடிப் போன திமுக எம்பி பார்த்திபன், புதிய விளக்கத்தை கொடுத்து முட்டுக்கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “பெரியாரின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பாலபிஷேகம் செய்தது தவறாக இருந்தாலும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரை ஹீரோவாக பார்ப்பதால் தான் பாலாபிஷேகம் செய்தனர். அனைத்து தரப்பு வயதினரையும் ஹீரோ பெரியார். மாணவர்கள் இந்த செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. பகுத்தறிவு தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி தினமாக அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம்,” எனக் கூறினார்.

இதற்கு அதுவே பரவாயில்லை என்பது போல, எம்பி விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் நெட்டிசன்கள் அதோடு சென்றிருப்பார்கள். ஆனால், பாலபிஷேகத்திற்கும் மேலான ஒரு கண்டன்ட்டை திமுக எம்பி கொடுத்து விட்டார் என்று கூறி, அதனையும் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 217

0

0