‘காவி மயமாகிறதா பெரியார் மண்’ -பா.ஜ.க.வில் இணைந்த பெரியாரின் சொந்த பேரன் : அதிர்ச்சியில் தி.மு.க.,!!

13 August 2020, 8:47 pm
periyar 1- updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் கட்சி தாவி வரும் நிலையில், பெரியாரின் சொந்த பேரனே பா.ஜ.க.விற்கு மாறியிருப்பது திராவிட கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பா.ஜ.க. தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களை, தங்களின் கட்சிக்கு இழுத்து வருகிறார். இது தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நேரமும் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் பா.ஜ.க.விற்கு மாறலாம் என்ற நிலை தமிழக அரசியலில் தற்போது நிலவி வருகிறது.

இப்படியிருக்கையில் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியான வி.பி. துரைசாமி, யாரும் எதிர்பார்க்காத வகையில், பா.ஜ.க.வில் இணைந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.க. மாநில துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மற்றுமொரு தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க.செல்வமும் அக்கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியினால், பா.ஜ.க. தேசிய தலைவரை சந்தித்து பேசினார். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். விரைவில் அவர் பா.ஜ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பெரியாரின் சொந்த பேரனே பா.ஜ.க.விற்கு மாறியிருப்பது திராவிட கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வசித்து வருபவர் தந்தை பெரியாரின் பேரன் சதீஷ் கிருஷ்ணா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.இவரது கொள்ளு பாட்டியும், பெரியாரின் அம்மாவும் சகோதரிகள் ஆவார்.

இவரது பெற்றோர் ரைஸ் மில் நடத்தி வந்த நிலையில், தந்தை பெரியார் தங்களின் வீட்டிற்கு வந்திருப்பதாக சிறு வயது நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

2018ல் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்த பெரியாரின் பேரன் சதீஷ் கிருஷ்ணா, தற்போது பா.ஜ.கவின் கொள்கை மீது கொண்ட ஈர்ப்பால், தற்போது இந்தக் கட்சியில் இணைந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

‘இது பெரியார் மண்… இது பெரியார் மண்…’ பா.ஜ.க.வினால் இங்கும் ஒன்று செய்ய முடியாது, என திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் கொக்கரித்து வந்த நிலையில், பெரியாரின் பேரனே பா.ஜ.க.வில் இணைந்திருப்பது அவர்களுக்கு பெருத்த அடியை கொடுத்துள்ளது.

தனக்காக குரல் கொடுக்காத தி.மு.க.வை கந்த சஷ்டியை கவசமாக கொண்டிருக்கும் முருகன் ஆட்டிப் படைக்கிறாரோ இல்லையோ..? எல். முருகன் நன்றாக வச்சு செய்கிறார்.

Views: - 0 View

0

0