பெட்ரோல் ரூ.5ம், டீசல் ரூ.10ம் அதிரடியாக குறைப்பு : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு!!!
Author: Babu Lakshmanan4 November 2021, 8:57 am
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசலுக்கான விலையை நாள்தோறும் உயர்த்தி வருகின்றன. இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனையாகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107-ஐ கடந்தும், டீசல் விலை ரூ.102ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும், டீசல் விலை உயர்வால் அத்தியாசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பாமர பொதுமக்களையும் பெரிதும பாதித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு இந்தியாவில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. எனவே, இந்த தீபாவளியை மக்களுக்கு மேலும் உற்சாகமாக்கும் விதமாகவும், பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்து நேற்று நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி, தீபாவளியையொட்டி பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-ம், டீசல் மீதான வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்து உள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்று பாஜகவினர் இதனை கொண்டாடி வருகின்றனர்.
0
0