தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்பு: நாளை மறுநாள் நிரந்தர சபாநாயகர் தேர்வு..!!

10 May 2021, 9:30 am
k pichandi - updatenews360
Quick Share

சென்னை: சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்கிறார்.

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை தொடங்குகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் இதற்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன. நாளைய தினம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்க உள்ளார்கள்.

இதனால் தற்காலிக சபாநாயகராக ஒருவர் நியமிக்கப்பட வேண்டிய சூழல் உருவானதை அடுத்து கு.பிச்சாண்டி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.

இதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீண்ட கால அனுபவம் உடையவர். எல்லாவற்றுக்கும் மேலாக பொறுமையானவர். இதனால் இவரையே கூட சபாநாயகராக தேர்வு செய்ய நாளை மறுநாள் அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன.

இதேபோல் துணை சபாநாயகர் தேர்வும் நாளை மறுநாளே நடைபெறவுள்ளது. சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் அல்லது ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு ஆகிய இருவரில் ஒருவர் துணை சபாநாயகர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 106

0

0