விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!

9 September 2020, 8:07 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : விளையாட்டு மைதானங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதன்படி, பொது போக்குவரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி உள்ளிட்ட முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், விளையாட்டு மைதானங்களுக்குள் 100 பேர் மட்டுமே அனுமதி, மைதானங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்ப தடை, மைதானங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி கிடையாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Views: - 0

0

0