வரும் 19ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

16 July 2021, 4:23 pm
cbse-class-12-exam - updatenews360
Quick Share

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3பாடங்களுடைய சராசரி), 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்)- 20% மற்றும் 12-ஆம் வகுப்பு செய்மறைத் தேர்வு அல்லது இன்டர்னல் மதிப்பெண்கள்- 30 % 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்கும் பெற்ற மதிப்பெண்கள் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ் 2 மதிப்பெண் விபரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், 2020-21ம் கல்வியாண்டின் பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். அதோடு, மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 150

0

0