அடுத்து நம்மோட ஆட்சிதான் வரனும்… இல்ல, மாடு மேய்க்கும் சிறுவன்தான் : பாமக நிர்வாகிகள் மீது பொரிந்து தள்ளிய ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
25 November 2021, 5:31 pm
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடந்த பாமக கூட்டத்தில் நிர்வாகிகள் மீது ராமதாஸ் கடிந்து கொட்டியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது இதேபோல, 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து, பாமக நிர்வாகிகளை மூத்த தலைவர்கள் அழைத்து பேசி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, நம்மிடம் போதிய சக்தி இல்லாததால், ஏதேனும் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் சொன்னதால்தான், மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்ததாகவும், திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்து விட்டதாக, ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்க வேண்டும் என்றும், இதற்காக நீங்க திண்ணை பிரச்சாரம் செய்வீர்களோ, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வீர்களோ…அது உங்கள் பாடு, எனக் கூறினார். மேலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமக ஆட்சியமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அவர் பேசியதாவது :- வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞர்கள் இருப்பதால். கடந்த தேர்தல் முடிவுகளை எல்லாம் மறந்து விட்டு, வரப்போகும் தேர்தலில் பாமக வெற்றி பெற்று, அன்புமணி ராமதாஸ் முதல்வராக வேண்டும் என்று கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும்.

உள்கட்சி பிரச்சனையால்தான் கடலூர் மாவட்டத்தை இழந்தோம். கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியாவிட்டால், மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டி இருக்கும், எனக் கூறினார்.

ராமதாஸின் இந்தப் பேச்சினால் அடுத்து பாமக நிர்வாகிகள் ஓடி ஆடி வேலைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 234

0

0

Leave a Reply