ராணுவ வீரர்களுக்காகவே இல்லங்களில் மக்கள் தீபம் ஏற்றுகின்றனர் : எல்லையில் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி..!!!

14 November 2020, 12:50 pm
Quick Share

ராஜஸ்தான் : நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். அப்போது, ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- நம் நாட்டு மக்களின் அன்பையும், வாழ்த்தையும் உங்களுக்காக இங்கு கொண்டு வந்துள்ளேன். மக்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் எப்போதும் உங்களுக்கு உண்டு. இந்த தீபவாளிப் பண்டிகையன்று வீர வணக்கத்தை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் மனம் நிறைவாக இருக்கிறது பனிமலையோ, பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் எனக்கு தீபாவளி.

மக்கள் இல்லங்களில் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். உங்களை பெருமைப்படுத்தவே வீடுகளில் மக்கள் தீபங்களை ஏற்றுகின்றனர்.

Views: - 22

0

0

1 thought on “ராணுவ வீரர்களுக்காகவே இல்லங்களில் மக்கள் தீபம் ஏற்றுகின்றனர் : எல்லையில் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி..!!!

Comments are closed.