வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் இரங்கல்…!!

1 November 2020, 4:08 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி துரைக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

சமுதாய சேவை, விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 19

0

0