நம் வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது : ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
3 August 2021, 10:27 am
modi hockey - updatenews360
Quick Share

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் வெற்றிக்காக போராடிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள அணியான பெல்ஜியத்துடன் விளையாடியது. இதில், 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இந்திய அணி அடுத்து வெண்கலத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த நிலையில், ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் வெற்றிக்காக போராடிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி, ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி தங்களால் முடிந்ததை வழங்கியது. அதுதான் முக்கியம். அடுத்த போட்டி மற்றும் அவர்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். நம்முடைய வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது, எனக் கூறினார்.

முன்னதாக, இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டத்தை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 302

0

0