பெண் விவசாயிகளுக்கு முன்னுதாரணம்…. சேலம் விவசாயி சாந்தியை பாராட்டிய பிரதமர் மோடி!!

Author: Babu Lakshmanan
1 January 2022, 6:41 pm
Quick Share

டெல்லி: சேலம் வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்படும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சாந்தியுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

விவசாயிகளுக்கு பிரதமர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியத்தின் 10வது தவணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பிரதமர் மோடி, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இதன் ஒரு பகுதியாக, சேலத்தை அடுத்த வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சாந்தியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, விவசாயி சாந்தி மற்றும் அவரது குழுவில் இருக்கும் பெண் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும், விவசாயி சாந்தியை முன்னுதாரணமாக பெண்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

அப்போது, வேளாண் பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேளாண்மையையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்டது.

தமிழக அரசு வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழக அரசு மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றின் உதவியுடன் எண்ணெய் வித்துகளில் இருந்து எண்ணெய் பிழிதல், மாவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ 18.28 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.

Views: - 524

0

0